D
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த திறுத்தமானது இன்று (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோ எடை கொண்ட காஸ் விலை ரூபா 65 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூபா 1,477 விற்பனையாகவுள்ளது.
மேலும், லிட்ரோ எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் (Litro) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.