D
இந்திய(India) மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முடிவுகளை கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திக்கு வர முடியாததால், பங்குச்சந்தையானது இந்த சரிவை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இன்று இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து, 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
மேலும், நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து, 22633.12யில் தடுமாறி வருகிறது. மேலும், சென்செக்ஸ் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.