D
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பிரச்சினை தொடர்பில் தாம் முன்வைத்த கேள்வியை சஜித் நாடாளுமன்றில் எழுப்புவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் எழுப்பிய கேள்வியை எவ்வாறு சஜித் பிரேமதாச எழுப்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என அவர் வினவியுள்ளதோடு இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மீதும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், சஜித் பிரேமதாச இந்த கேள்வியை 11.40 இற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தி 12.10 இற்கு கேள்வி எழுப்பியதாகவும் சபாநயாகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் காரியாலயத்தின் ஊடாக கேள்வி எழுப்பாது நேரடியாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கேள்வியை ஒப்படைக்க முடியுமா என அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, விரும்பினால் நேரடியாக கேள்விகளை ஒப்படைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் நேரடியாக கேள்விகளை ஒப்படைப்பது பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தின் ஊடாக கேள்வி எழுப்பும் போது அங்கு சிறுபிள்ளை விளையாட்டுக்கள் இடம்பெறுவதாக அனுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.