Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வாரணாசியில் போராடி வென்ற பிரதமர் நரேந்திர மோடி

0 4

உத்தர பிரதேசத்தின் வாரணாசி (Varanasi) தொகுதியில் 3வது முறையாக பா.ஜ.க (bjp) சார்பில் களமிறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாரணாசி தொகுதியில் ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார்.

அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகமாகும்.

எனினும், கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.