D
குறிப்பிட்ட சமூகத்துடன் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்திய வழக்கில், நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அவர், அண்மையில் முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்ட வார்த்தை ஒன்றை கூறி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.