Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி : மம்தா பானர்ஜி கர்ஜனை

0 9

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi ) ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார், அவர் பதவி விலகல் செய்ய வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி மேலும் தெரிவிக்கையில்,

பா.ஜ.கவுக்கு இத்தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ரீதியாக பா.ஜ.கவை திரிணமுல் காங்கிரஸ் வென்றுள்ளது.

சந்தேஷ்காலி விவகாரத்தில் பலமுறை பொய் சொல்லியே வந்தது பா.ஜ.க. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் பிரதமர் மோடி. அவர் தனது பதவியை பதவி விலகல் செய்ய வேண்டும்.

மோடியால் இனி ‛இண்டியா’ கூட்டணியை உடைக்க முடியாது. உத்தவ், சரத்பவார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளேன். இத்தேர்தலில் கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.