D
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புக்கள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கட்டளையின் பிரகாரம் இந்த நாட்டில் 15 பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 210 பேரின் நிதி, ஏனைய நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (TRO), தேசிய தவ்தீஹ் ஜமாத் (NTJ), ஜமாதே மிலாதே இப்ராஹிம் (JMI) போன்ற 15 அமைப்புகளின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 113 பேரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.