Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்

0 5

இலங்கையின்(Sri Lanka) முல்லைத்தீவில் (Mullaitivu) இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இந்தியாவின் (India) ராமேஸ்வரத்தில் (Rameswaram) தஞ்சமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து நேற்று (4) மன்னாருக்கு (Mannar) சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (5) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்கலாக ஆறு பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.