D
புத்தளத்தில் (Puttalam) காவல்துறையினர் மற்றும் வான்படையின் முன்னாள் அதிகாரிகளை சர்வதேச நிபுணர்கள் மற்றும் இலங்கையின் (Sri Lanka) தமிழ் சிவில் சமூகம் என்பவற்றால் விமர்சிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் உண்மையை கண்டறியும் செயலகத்தின் அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை அறிந்துக்கொள்ள நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சிறந்த கல்வி, சுகாதாரம், ஆசிரியர்களின் வெற்றிடங்கள் காரணமாக கல்வியின் பாதிப்பு மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்வு, காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த செயலகத்தின் பணிகளை கைவிடுமாறு சர்வதேச மற்றும் உள்ளூர் தமிழ் சிவில் சமூகம் என்பன தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதோடு இது வெறும் கண்துடைப்பு என்று அவை விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.