Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்

0 1

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அதிபரின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.

ரணிலின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் (colombo) இன்று (06) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

கொழும்பு (Colombo) – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று (06) காலை திறந்து வைத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிபர் தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.