Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய நாடு

0 1

சுவிட்சர்லாந்தை (Switzerland) சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் புதிய கருவி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மற்றும் Bern பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் spectrograph என்னும் கருவி, சிலி நாட்டில் தற்போது கட்டப்பட்டுவரும் European Southern Observatory என்னும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிறுவப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருவி 120 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்படுகிறது.

இதேவேளை இந்த கருவி, வெவ்வேறு கிரகங்களின் வளிமண்டல வேதி கூட்டமைப்பைக் கண்டறிந்து, அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதற்கான அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும், வெற்று கிரகவாசிகளை தேடும் இந்த திட்டமானது, 2032 இல் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.