D
இந்தியாவின் பிரதமராக பாரதீய ஜனதாக்கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ஆம் திகதியன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
இதன்படி அவர் தொடர்;ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்கிறார்.
இதனை பாரதீய ஜனதாக்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர் இன்று ஆட்சியமைப்பதற்கான கோரலை குடியரசுத்தலைவரிடம் விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமது கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி மற்றும் தமது ஆட்சிக்கு ஆதரவளிக்கும் ஒப்புதல் கடிதங்கள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.