Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள வாய்ப்பு

0 2

இந்தியாவில் (India) இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றிற்கு இலங்கையிலிருந்து செல்ல விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவினால் விசேட புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்படுவதாக இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் லபலு விஜேசூரிய (Lapalu Wijesooriya) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த புலமைப்பரிசிலை பெற விரும்புபவர்கள் தங்களது சுயவிபர கோவையை (CV) இந்திய உயர்ஸ்தானிகராலய மின்னஞ்சலுக்கு (slhc.newdelhi@mfa.gov.lk) அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பதிவுகள் இன்றுடன் (11.06.2024) முடிவுறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் காரியாலயத்திற்கு தொடர்பு ( 0091 11 23010201, 23010202, 23010203) கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.