Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

குடிவரவுத் திணைக்களம் மக்களிடம் மீண்டும் விடுத்துள்ள கோரிக்கை

0 2

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது வரையிலும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்னமும் டிஜிட்டல் அடையாள அட்டைகள் வெளியிடப்படவில்லை. இதனால் கடவுச்சீட்டு பெற வேண்டும் என்றால் புதிய மற்றும் தெளிவான அடையாள அட்டையுடன் வந்து சேவையை பெற்றுக் கொள்ளுங்கள்.

கடந்த சில நாட்களாக தெளிவற்ற அடையாள அட்டையுடன் வந்து பலர் சேவையை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி செல்கின்றார்கள். இதனால் புதிய அடையாள அட்டையை விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு கடவுச்சீட்டு பெற வாருங்கள்.

அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுச்சீட்டை வழங்குவதே தமது திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும் என அவர் மேலம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.