D
இன்றைய ராசிபலன் ஜூன் 11, 2024, குரோதி வருடம் வைகாசி 29, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில நல்ல செய்திகள் தேடி வரும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை தொடர்பாக வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்கள் வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். இந்த சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் செயல்பாடு புகழையும், மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன் பெற்றோரின் ஆசியை பெறவும். உங்களின் வேலையில் வெற்றி கிடைக்கும். இன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். காதல் வாழ்க்கையில் இனிய அனுபவங்கள் பெறுவீர்கள். உங்கள் துணையின் ஆதரவு பல வழிகளில் இருந்து சிரமங்களில் இருந்து விடுவிக்கும். சுப காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் அதிகாரம் அதிகரிக்கும். அரசாங்க வேலையில் ஈடுபட்டுள்ளவர்களின் மரியாதை கூறும். இன்று கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் பண பற்றாக்குறையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான சாதகமான நாள். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தரும். உங்கள் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழியில் நல்ல ஆலோசனை கிடைக்கும். இன்று உங்கள் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். காதல் விஷயத்தில் இனிமையான பலன் கிடைக்கும். இன்று கடன் கொடுப்பது, கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். வணிகம் தொடர்பான பயணங்கள் வெற்றியை தரும்.
ஆனி மாத ராசி பலன் 2024: செல்வம், புகழ், அதிர்ஷ்டம் சேர உள்ள 5 ராசிகள்
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். குடும்பப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. புத்தகம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் நல்ல வெற்றி பெறலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்வார்கள். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். இன்று உங்கள் என் நிதி நிலை மேம்படும். எந்த ஒரு முதலீடு விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்கள், உறவினர்கள் மூலம் சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு அரசு தொடர்பான வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் கவனம் தேவை. உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தவும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சொத்துக்கள் தொடர்பான விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று உங்களின் பதவி மற்றும் அதிகாரம் அதிகரிக்கும் இன்று பொருள் இன்பம் முழுமையாக அனுபவிப்பீர்கள். பணியிடத்தில் நிலவில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவலை அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல வெற்றியை பெற்று தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இன்று பணியிடத்தில் உங்களின் யோசனைகள் மற்றும் திறமைகள் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் உடல் வலிமை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். இன்று வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் பிறரிடம் கவனமாகப் பழகவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு கல்வி கான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வங்கி அல்லது சிலரிடம் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். குடும்பத்தின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய திட்டங்களில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். குழந்தைகளின் தொடர்பான விஷயத்தில் மன நிம்மதி கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். இந்த ஒரு அவசரமான வேலையும் உங்களுக்கு தீமையை விளைவிக்கும். இன்று பெற்றோர் சேவையில் ஈடுபடவும். உங்கள் சகோதரரின் ஆலோசனைகள் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். உங்களின் திட்டமிட்டுக் காரியங்கள் நிறைவேறும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும்.