D
கொழும்பு – தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த 31 வயதுடைய பெண் தனது கணவருடன் வாடகை அடிப்படையில் வீடொன்றில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும், அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் வீதியில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.