D
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், (Ranil Wickremesinghe)தமது அணிக்கும் இடையில் எவ்வித ஒப்பந்தமும் கிடையாது என்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ரணிலும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தம் இருப்பதாகவும், அக்கட்சியினர் சிவப்பு யானைகள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அக்குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு மக்களுடன் மட்டுமே ஒப்பந்தம் உள்ளது. ஜனாதிபதியுடன் யாருக்கு ஒப்பந்தம் உள்ளது என்பது விரைவில் தெரியவரும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.