Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

விபத்தில் உயிரிழந்த கணவர் – கொழும்பில் அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி

0 3

கம்பஹா, எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் லியனகே கலும் துஷார சில்வா என்பவர் விபத்துக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி ரசோமா ஹசந்தி திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவி, நானும் உங்களுடன் வந்துவிடுவேன் என கதறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவரும் உயிரிழந்துள்ளார்.

ரசோமாவின் பூதவுடல் கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு களனி, கோனவலயிலுள்ள பமுனுவில இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.