D
வடக்கு மாகாணத்தின் (northern province) கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சி மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா(Pradeeparaja) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழை வீழ்ச்சி 90 மி.மீ. ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு மாதம் முடிவடையாத நிலையில் இடம் சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் திங்கட்கிழமை வரை 230 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
இந்த மாத இறுதியில் இதனளவு இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தின் இது வரையான 20 நாட்களில் 12 நாட்கள் மழை கிடைத்துள்ளது.
ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதி, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதி அதிக அளவிலான மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.