D
மெக்சிகோவில் பேரணியின் போது மேடை இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பலத்த காற்று காரணமாக மேடை இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்த துயர சம்பவம் புதன்கிழமை மாலை நிகழ்ந்தது.
அத்துடன் இந்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
வடக்கு மெக்சிகோவின் San Pedro Garza Garcia என்ற பகுதியில் மத்திய-இடது ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸின் (Jorge Alvarez Maynez) பிரச்சார கூட்டத்தின் போது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அல்வாரெஸ் மேனெஸ் பேசிக் கொண்டிருந்த போது, பலத்த காற்று சுழற்சி மேடை அமைப்பையே இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்குப் பிறகு மக்கள் கீழே விழும் இடிபாடுகளில் இருந்து தப்பி ஓட முயன்றதால், அங்கு பதற்றமும் குழப்பமும் நிலவியது, மேலும் பொதுமக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யவும் போராடினர்.
மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
மரண விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இரவு முழுவதும் நீடித்தன.