D
இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டுப் பிரஜைகள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருளை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே தண்டனை விதித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் இலங்கைக் கடற்பரப்பிற்கு சொந்தமான சர்வதேச கடல் எல்லையில் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.