D
களனி பிரதேசத்தில் போலியான ஆவணங்களுடன் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஜாஎல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 5000 ரூபா போலி நாணயத்தாள், போலி தேசிய அடையாள அட்டை, 8 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், 2 வெளிநாட்டு தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம், அரசாங்கத்தின் 11 இறப்பர் முத்திரைகள் மற்றும் ஏனைய ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான இந்த பெண் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.