Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள் : சாணக்கியன்

0 2

மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைக்கப்பட்டாலும் கூட மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன நிலையில தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி பதிந்து வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் நேற்று (13.06.2024) மட்டக்களப்பு(Batticaloa) களுதாவளையில் வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஒருவருட காலத்திற்கு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் அதற்குரிய சூழ்நிலை இருக்கின்றது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் இன்னும் ஒரு வருடத்தினால் நீடிப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் ஜனாதிபதி முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியவர்கள், நாடாளுமன்றத்தையே இனிமேலும் கனவாக வைத்திருக்கும் பின்வரிசை, முன்வரிசை உறுப்பினர்களிடையே ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஒன்று நடத்தியதாக வதந்தி ஒன்றை நாமும் கேள்விப்பட்டடிருந்தோம்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தினதும், ஜனாதிபதியினதும் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிப்பது தொடர்பாகத்தான் அதில் பேசப்பட்டதாக எமக்கும் சொல்லப்பட்டது.

இலங்கையில் முக்கியமான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்திலே கொண்டு வரப்பட்டபோது. அதனை நாடாளுமன்றத்திலே வாக்கெடுப்பிற்கு விட்டபோது அரசாங்கத்திற்குச் சார்பாக 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருந்தது.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதென்பது அனைவரும் அறிந்த விடயம்.

தற்போது நாட்டிலே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பொறுமையாக இருப்பதற்குரிய காரணம், மிக விரைவாக ஜனாதிபதித் தேர்தல் வரும் அதிலே ஆட்சிமாற்றம் உருவாகும் அதன் பின்னர் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு மக்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது கண்துடைப்பாக மின்சார கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும்கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி பதிந்து வைத்திருக்க வேண்டும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.