D
நாட்டில் உள்ள 07 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26,084 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,558 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.