Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் – 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

0 9

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை பாரிய விபத்தில் இருந்து தடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இடங்கொட கலத்துர வீதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாரிய பள்ளத்தில் விழும் நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டது.

நேற்று காலை கலவானையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.

விபத்து நடந்தபோது பேருந்தில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.

வீதியின் ஓரத்தில் இருந்த மதில் நோக்கி பேருந்து திருப்பி, ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதி தடுத்துள்ளார்.

வீதியின் மறுபுறம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் விபத்து ஏற்பட்டிருந்தால், பல மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சேறும் சகதியுமாக இருப்பதால் பல வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.