D
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தொடர்பில் புயலைக்கிளப்பும் 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதில், தமது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பலருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார் என அறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.
பெண் ஒருவரை தமது குடியிருப்புக்கு அழைத்ததாகவும், அவருடன் நள்ளிரவு கடந்தும் குறுந்தகவல் அனுப்பியதாகவும், இதனால் தமது வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது என்றும் தொடர்புடைய பெண் குறிப்பிட்டுள்ளார்.
எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் உறவுக்கு ஈடாக பரிசுகளை வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது என மஸ்க் மறுத்துள்ளார்.
இன்னொரு SpaceX பெண் ஊழியரிடம் பல முறை தமது பிள்ளைக்கு தாயாக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் குறித்த பெண் ஊழியர் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அதே வேளை மஸ்க்கின் Neuralink நிறுவனத்தின் பெண் ஊழியர் மூலமாக அவருக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். மேலும், எலோன் மஸ்க் அதிகமாக போதை மருந்து பயன்படுத்துபவர் என்றே அவரது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அவரது சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளதுடன், வாடிக்கையாக சோதனை மேற்கொள்பவர் என்றும் ஒரு சோதனையில் கூட மஸ்க் தவறிழைத்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மஸ்க் நிறுவனங்களில் புகார் எழுப்பப்பட்டாலும், அது தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும், ஆனால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என மட்டும் உறுதி அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எலோன் மஸ்க் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இதுவரை நேரிடையாக பதிலளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.