D
சென்னையில் பிரிகேட் குழுமம் 15 மில்லியன் சதுர அடியில் குடியிருப்பு, அலுவலகம், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் திட்டங்களுக்காக ரூ.8,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இது மத்திய சென்னையில் முதல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கவுள்ளது.
இதற்காக சிங்கப்பூரில் உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் SOG பணியமர்த்தப்படவுள்ளார்.
ஏற்கனவே குறித்த நிறுவனம் சென்னையில் சுமார் 5 மில்லியன் சதுர அடியிலான கட்டடங்களை கட்டியது.
மேலும் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் பிரிகேட் குழுமம் தெரிவித்துள்ளது.
1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிகேட் குழுமம், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மைசூர், கொச்சி, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அலுவலகங்களை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.