D
G7 உச்சி மாநாட்டுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி கட்டுப்பாடின்றி எங்கோ நடந்து செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதியைக் குறித்த செய்திகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன.
நேற்று மாலை, G7 நாடுகளின் கொடிகளைப் பிடித்தபடி பாராசூட்டில் வீரர்கள் குதிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
G7 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தலைவர்கள் அனைவரும் அந்த காட்சிகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருக்க, திடீரென வேறு பக்கம் திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வேறு திசையை நோக்கி நடக்கத் துவங்கினார்.
அவரிடம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா ஏதோ கூற, அதையும் கவனிக்காமல் ஜோ பைடன் எங்கோ நடந்து செல்ல, உடனடியாக உதவிக்கு வந்தார் இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலானி.
எங்கோ சென்று கொண்டிருக்கும் ஜோ பைடனை மெலானி சென்று கையைப் பிடித்து மற்ற தலைவர்கள் நிற்கும் இடத்துக்கு அழைத்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் அணு ஆயுதங்களை தன் பொறுப்பில் வைத்திருக்கும், முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜோ பைடன் இப்படி சரியான மன நிலையில் இல்லாமலும், மறதியுடனும் நடந்துகொள்ளும் விடயம், கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் இணையவாசிகள்.