Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மக்களின் கோரிக்கையையும் மீறி இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ்

0 3

மக்களின் கோரிக்கையையும் மீறி, மன்னர் சார்லஸ், இளவரசி கேட்டுக்கு முக்கிய பொறுப்பொன்றை வழங்காமல் வேறு இரண்டு பேருக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் வழங்கப்படும் கௌரவத்துக்குரிய உயரிய பொறுப்புகளில் ஒன்று Order of the Garter என்னும் பொறுப்பாகும்.

வரும் திங்கட்கிழமை, அதாவது, ஜூன் மாதம் 17ஆம் திகதி, இந்த Order of the Garter என்னும் விடயம் தொடர்பான Garter Day என்னும் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, இரண்டு பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் மன்னர் சார்லஸ்.

பிரித்தானிய உளவு ஏஜன்சியான MI5இன் director general என்னும் பொறுப்பை வகித்த, Baroness Manningham-Buller என்னும் பெண்ணுக்கு Chancellor of the Order of the Garter என்னும் பொறுப்பையும், Lord Ashton of Hyde என்பவருக்கு, the Master of the Horse என்னும் பொறுப்பையும் வழங்கியுள்ளார் மன்னர்.

நீண்ட காலமாகவே, இளவரசி கேட்டுக்கு Order of the Garter பொறுப்பொன்றை வழங்கவேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், விரைவாக பணிக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

இருந்தும் அவருக்கு Order of the Garter பொறுப்பை வழங்காமல் விட்டுவிட்டார் மன்னர் என பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.