Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

0 2

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) அச்சுவேலி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் ஊடகவியலாளர் ஒருவரின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் வீட்டில் இருந்த உடமைகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவினரை அழைத்து வந்து ஊடகவியலாளரின் வீட்டை அடையாளம் காட்டியவர் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து யார் தலைமையில், எதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குழுவுக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து பணம் வந்துள்ளது என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் த.பிரதீபனின் உயிருக்கு அச்சுறு்த்தல் விடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து இன்று (19) யாழ்.பிரதான பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.