D
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S.Jaishankar) நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.