D
இலங்கை (Sri Lanka) முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் எதிர்வரும் 26ம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) நேற்று (18) நடைபெற்ற வைபவமொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.