D
தம்புள்ளையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party) அலுவலகம் தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தநிலையில், இது தேர்தலுக்கு முந்தைய வன்முறையின் தொடக்கமாகத் தெரிகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது, அனைத்து விளம்பரங்களும் அழிக்கப்பட்ட நிலையில், அலுவலகம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கட்சியால் குற்றம் சுமத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.