D
பிரான்சில்(France) தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) தான் என தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென் (Marine Le Pen) குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தீவிர இடதுசாரிகள் கூட்டணியும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பொருட்டு போராடி வருகிறது.
இந்நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அது நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மேலும், கூட்டணி கட்சிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேக்ரான் கூட்டணி அல்லது இடதுசாரிகள் அணி எவ்வாறேனும் ஆட்சிக்கு வரும் என்றால், வலுவான நிலையில் இருக்கும் தீவிர வலதுசாரிகளால் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னெடுக்க கோரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே நாட்டின் மொத்த நெருக்கடிக்கும் காரணம் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் என வலதுசாரித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் பிரதமர் எந்த நிலையில் இருந்து வருவார் என்பதை யாராலும் அறிய முடியாத நிலையில் இன்று நாம் புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டுக்காக என்ன கொள்கை பின்பற்றப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.