Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

0 6

அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் தனியார் மலர்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கிளப் வசந்தாவின் இரண்டாவது மகன் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்நாட்டிற்கு வரும் வரையில் சடலத்தை மலர்சாலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அதுருகிரியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கிளப் வசந்த என்ற தொழிலதிபர், அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் பச்சைகுத்தும் நிலைய உரிமையாளர் துலான் சஞ்சுலாவும் ஒருவராகும். குறித்த ஏழு பேரும் நேற்றிரவு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நயனா வசுலாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் தலாஹேன பொது மயானத்தில் இடம்பெற்றன.

Leave A Reply

Your email address will not be published.