Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம்

0 4

இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) அரசியலமைப்பு பேரவையால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் 31 ஆவது சட்ட மா அதிபராக சேவையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலம் கடந்த மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், அவரது சேவைக்காலத்தை ஆறு மாதங்களால் நீடிக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) இரண்டு தடவைகள் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்த பின்னணியில், இன்று பரிந்த ரணசிங்க சிறிலங்காவின் 32 ஆவது சட்ட மா அதிபராக அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.