Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

டயனா கமகேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுக்கள்

0 2

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் ஏழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி தகவல்களை வழங்கியமை, போலிய ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது எனக் கூறி சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த நிலையில், ஏனைய குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கிய குற்றப் பத்திரிகை ஒன்றை குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.