D
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில், மொட்டு கட்சி நிச்சயமாக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உறுயளிக்கப்பட்டது போன்று ரணில் விக்ரமசிங்கவிற்கு இரண்டாண்டுகள் ஆதரவளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ரணிலின் அரசியல் பயணம் தனியான பாதையிலும் மொட்டு கட்சியின் அரசியல் பயணம் தனியான பதையிலும் நகரும் எனவும், ஜனாதிபதி தேர்தல் வாக்குச் சீட்டில் மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கூட்டணி அமைத்துக்கொண்டாலும் சின்னத்தில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.