Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அறிமுகமாகும் புதிய ஒழுக்கவிதி

0 1

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பு பணிக்குளம் ஆகிய தரப்புகளுக்கு புதிய வழிகாட்டல்களை அறிமுகம் செய்ய இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் நன்மதிப்பையும், வீரர்களின் தொழில்முறை தன்மையையும் பேணுவதற்கும் இந்த புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் ஆடைகள், பயணங்கள் உணவு மற்றும் சமூக ஊடக பயன்பாடு போன்றன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை எடுக்கும் போது சட்டை, காற்சட்டை மற்றும் கோர்ட் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், போட்டியின் நாணய சுழற்சி, தேசிய கீதம், விருது பெறுதல் மற்றும் ஊடக சந்திப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பங்கேற்கும் வீரர்கள் தேசிய அணியின் ஆடைகளை (Sports kit) அணிந்து செல்வது கட்டாய படுத்தப்படவுள்ளது.

மேலும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு கட்டைக் காற்சட்டை, செருப்பு என்பனவற்றை அணிந்து செல்வது செல்வது தடை செய்யப்படுள்ளதாக கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

போட்டி தொடர் ஒன்றின் போது சமூக ஊடக பயன்பாடு, இணைய விளையாட்டுக்களை விளையாடுதல்,மற்றும் அதற்கு நிகரான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வரையறைகள் விதிக்கப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அனுமதியின்றி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பு குளம் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும் பயிற்சியின்போதும் போட்டியின் போதும் அலைபேசியை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு உணவு மற்றும் பானங்களுக்காக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகையை பயன்படுத்தி உணவு உட்கொள்ளாது, அவற்றை சேமிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

அத்தோடு, வெளிநாட்டு போட்டித் தொடரின் போது உணவிற்காக 150 டொலர்களும் உள்நாட்டு போட்டித் தொடரின் போது 100 டொலர்களும் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

இருபது நாட்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை அந்த நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்ற போதிலும் அதற்கு அதற்கான செலவுகளை விளையாட்டு வீரர்கள் ஏற்க வேண்டுமென அறிவுறுத்தப்படவுள்ளது.

இதன்படி இந்த ஒழுக்கவிதி வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் உறுப்பினர்களுக்கு 10000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படக் கூடிய வகையில் இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.