D
கிளப் வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த பொறளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொலைபேசி இதுவரையில் அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.
குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், எனினும் அழைப்பு விடுத்த நபர் யார் என்பது பற்றி இதுவரையில் தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.