Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

0 3

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு கடுமையான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த வேண்டும் என அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரி நகரில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த என்பவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பாதாள உலகத்தை இவ்வாறு ஆட அனுமதித்தால் நாட்டில் அமைதியை எவ்வாறு பேணுவது என அந்தந்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கடுமையாக கோரிக்கையொன்றினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தேர்தலின் போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் மக்களை ஒடுக்கும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மக்களை ஒடுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.