D
வட மாகாணத்தில் வைத்தியத்துறை மாபியாக்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் நலிவடையச் செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அது வைத்திய மாபியாகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருந்தது.
திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வைத்தியர் அர்ச்சுனா களமிறங்கப்பட்டதாக சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அது எவ்வாறாக இருந்தாலும், வைத்தியரால் அம்பலப்படுத்தப்பட்ட மோசடிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயற்படும் வைத்திய மாபியா கும்பல்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வைத்தியர்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கொதிந்தெழுந்தார்கள், இந்த மோசடிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில வாரமாக இது குறித்து பல்வேறு வாத விவாதங்கள் ஏற்பட்டாலும், தற்போது மக்கள் போராட்டம் முழுமையாக தோல்வி அடைந்த ஒன்றாகவே மாறியுள்ளது.
இதற்கு வட மாகாண அரசியல்வாதிகளே காரணம் என உண்மைகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியாலைக்கு இன்று சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது சவாகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மோசடி குறித்து அதிகம் பேசப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அது முற்றுமுழுதாக மூடி மறைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறாதொரு பிரச்சனை அங்கில்லை என சில தமிழ் அரசியல்வாதிகளால், சுகாதார அமைச்சரிடம் தெரிவித்ததாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தலின் போது இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் நேரடியாக அரசியலில் ஈடுபடாத போதும், மக்களின் ஆதரவுடன் ஒருவரை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் தமிழ் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற நபராக வைத்தியர் அர்ச்சுனா உள்ளார்.