Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

89000 ரூபா பணத்தை தருவதற்கு மறுக்கும் பணிப்பாளர் கேதீஸ்வரன்: வைத்தியர் அர்ச்சுனா குற்றச்சாட்டு

0 1

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் சம்பளப் பணத்தின் மிகுதியை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் தரமறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட காணொளி ஒன்றின் மூலம் அர்ச்சுனா இராமநாதன் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தன்னுடைய மேலதிக கொடுப்பனவானது இன்றுவரை வழங்கப்படவில்லை என்றும், அதற்கான தரவுகளை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அர்ச்சுனா கூறியுள்ளார்.

அத்தோடு தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் பிரதேசங்களில் ஒருபோதும் சேவையை தொடரமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை 3 மாதகாலம் தனது பாவனைக்காக, வைத்திருப்பதாகவும் அதனை உடைக்கவோ, வேறுநடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.