D
சண்டையில் பேசாமல் இருந்த பெற்றோர்களுடன் மீண்டும் இணைந்துள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா… அழகிய குடும்ப போட்டோ
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா.
நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் அப்படியே விஜய் டிவி பக்கம் ராஜா ராணி தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அந்த தொடர் அவருக்கு சினிமா வாழ்க்கைக்கும், சொந்த வாழ்க்கைக்கும் ஒரு ஆரம்பமாக இருந்தது.
அந்த தொடரில் தன்னுடைய நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் படு பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டி குடிபோனார்கள்.
நடிகை ஆல்யா மானசாவின் திருமணத்திற்கு அவரது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. எனவே அவர்களை எதிர்த்து தான் சஞ்சீவை திருமணம் செய்துகொண்டார் ஆல்யா.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார் நடிகை. அதாவது அவரது கணவர் சஞ்சீவ், ஆல்யாவின் பெற்றோர்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.