D
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடித்து வெளிவந்த இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.
அமரன் படம் மாஸ் வெற்றி, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சாய் பல்லவி… எவ்வளவு தெரியுமா?
அமரன் படம் மாஸ் வெற்றி, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சாய் பல்லவி… எவ்வளவு தெரியுமா?
முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், 15 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 131 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கங்குவா படம் வெளிவந்த நிலையிலும், அமரன் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விரைவில் ரூ. 300 கோடி வசூல் சாதனையை அமரன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.