D
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் அங்கு ஏலம் விடப்பட உள்ளது.
இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 182 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 364 நாட்களில் 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் அங்கு ஏலம் விடப்படும்.
இதனையடுத்து மீண்டும் இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.