D
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டிருந்தோம். எனினும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் காரணமாக நிலைமை சீரடைந்து வருகின்றது. வெளிநாட்டு கையிருப்பு 20 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்நதும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து பொருளாதார வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.
இன்றும் அந்த வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. வெளிநாட்டு கையிருப்பு 20 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்தாலோசித்து 08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அத்தகைய சாதனைகளை செய்த ஒரே அரசியல் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.