D
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினரால் அவர் கைது செய்யப்படும்போது, தனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி சிகிச்சை மேற்கொண்டார்.
இந்த நிலையில், நீதிமன்றக் காவல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
எனினும், செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார், அதன்பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.