Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கொழும்பை உலுக்கிய கிளப் வசந்த கொலை விவகாரம்: மேலும் இருவர் கைது

0 2

அத்துருகிரியவில் கிளப் வசந்தவை சுட்டுக்கொல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் தப்பிச்செல்வதற்கு உதவிய வானின் சாரதியும்,சந்தேகநபர்களை பேருந்தில் அழைத்து சென்ற சாரதியும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் அத்துருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த (08) அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.