D
பிடிகல – நியாகம வீதியின் மட்டக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பிடிகல பிரதேசத்தில் வசிக்கும் மரக்கறி வியாபாரியும் அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த பெண்கள் இருவரும் உயிரிழந்தவரின் உறவினர்கள் எனவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் எல்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.